தந்தையே கூடுமானால் இந்தத்

thandhaiyae koodumaanaal indhath

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

தந்தையே கூடுமானால் இந்தத் துன்பம் என்னை விட்டகன்று போகச் செய்திடும் (2) ஆனாலும் என் வாழ்வில் உமது விருப்பம் ஒன்றே எப்போதும் எனக்கு நிகழட்டும் (2) 1. சிதறிப்போன ஆடுகளை ஒன்றுசேர்க்க முனைந்தேன் பகலில் ஓடித் தேடினேன் அலைந்து அலைந்து சோர்ந்திட்டேன் 2. நலிந்துபோன ஆடு தன்னை தோளில் தூக்கிச் சுமந்திட்டேன் மெலிந்த ஆட்டுக்குட்டிகளை கிடையில் மெல்ல சேர்த்திட்டேன் கிடையினைத் தாக்கும் ஓநாய்கள் தொல்லை கடைசிவரைக்கும் ஓயவில்லை 4. அரவணைக்கும் கரங்களுக்கு பரிசாக ஆணிகளோ அன்புசெய்யும் இதயத்தின் ஆழம் காண ஈட்டியோ உண்மைக்கென்றும் சாட்சியாய் வாழந்தவர்க்கு சாட்டையோ நன்மைகளை நாட்டுக்காய் செய்தவர்க்கு சிலுவையோ எந்தன் தந்தையே ஏன் என்னை இன்று இந்த நிலையில் கைவிட்டியோ 5. வேதனையில் வெந்து நான் வீழ்கின்ற போதிலும் தனிமையில் போட்டு தவிக்கின்ற போதிலும் சோதனையில் நான் விழாது காத்திடும் தந்தையே தீமையிலிருந்து காப்பாற்ற வேண்டுமே உந்தன் கரங்களில் எந்தன் ஆவி தன்னை ஒப்படைக்கிறேன் தந்தையே
thandhaiyae koodumaanaal indhath thunbam ennai vittagandru pogach seidhidum (2) aanaalum en vaazhvil umadhu viruppam onrae eppodhum enakku nigazhattum (2) 1. sidharippona aadugalai ondrusaerkka munaindhaen pagalil odith thaedinen alaindhu alaindhu sorndhittaen 2. nalindhubona aadu thannai tholil thookkich sumandhittaen melindha aattukkuttigalai kidaiyil mella saerththittaen kidaiyinaith thaakkum onaaigal thollai kadaisivaraikkum oyavillai 4. aravanaikkum karangalukku parisaaga aanigalo anbuseiyum idhayaththin aazham kaana eettiyo unmaikkendrum saatchiyaai vaazhandhavarkku saattaiyo nanmaigalai naattukkaai seidhavarkku siluvaiyo endhan thandhaiyae yen ennai indru indha nilaiyil kaivittiyo 5. vaedhanaiyil vendhu naan veezhgindra podhilum thanimaiyil pottu thavikkindra podhilum sodhanaiyil naan vizhaadhu kaaththidum thandhaiyae theemaiyilirundhu kaappaatra vaendumae undhan karangalil endhan aavi thannai oppadaikkiraen thandhaiyae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.