தன்னை வழங்கும் தலைவன்

thannai vazhangum thalaivan

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

தன்னை வழங்கும் தலைவன் தந்த விருந்திது - இந்த தரணி மாந்தர் வாழ நல்ல மருந்திது (2) உள்ளங்களில் ஆட்சி செய்ய வந்தது நாளும் உண்மையின் சாட்சியாக அழைக்குது 1. அவல நிலையில் உள்ளோர்க்கு அமைதி தரும் - இது உரிமை இழந்த மனிதருக்கு சக்தி தரும் (2) அன்பு நீதி நேர்மையுள்ள ஆட்சியைத் தேடும் - 2 நம் உள்ளத்தில் உறைந்து உணர்வினில் கலந்திட 2. காலந்தோறும் கண்ணிமை போல் நம்மைக் காக்கும் - இது கறைகள் நிறைந்த இதயத்தினைத் தேடிவரும் (2) மனித நேயம் மானிடர் காண ஏங்கிடும் - 2 நம் மனக்கவலைகளை மகிழ்ச்சியால் நிறைத்திட
thannai vazhangum thalaivan thandha virundhidhu - indha tharani maandhar vaazha nalla marundhidhu (2) ullangalil aatchi seiya vandhadhu naalum unmaiyin saatchiyaaga azhaikkudhu 1. avala nilaiyil ullorkku amaidhi tharum - idhu urimai izhandha manidharukku sakthi tharum (2) anbu needhi naermaiyulla aatchiyaith thaedum - 2 nam ullaththil uraindhu unarvinil kalandhida 2. kaalandhorum kannimai pol nammaik kaakkum - idhu karaigal niraindha idhayaththinaith thaedivarum (2) manidha naeyam maanidar kaana yengidum - 2 nam manakkavalaigalai magizhchchiyaal niraiththida
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.