தயை செய்வாய் நாதா

thayai seivaai naadha

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி 1. அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும் அனுதபித்து என் பிழையை அகற்றுமய்யா பாவமதை நீக்கி என்னைப் பனி போலாக்கும் தோஷமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும் 2. என் குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல் தீவினையை மறவாதென் மனது என்றும் - உம் புனிதத்தைப் போக்கி நான் பாவியானேன் - நீர் தீமையென்று கருதுவதைத் துணிந்து செய்தேன் 3. பாவத்தில் ஜென்மித்தேன் நீயறிவாய் தோஷத்தில் பெற்றெடுத்தாள் என் தாயே - உம் தீர்ப்பு தனில் குற்றமோ குறையோ இல்லை - உம் முடிவுகளின் நீதியையும் எதிர்ப்பாரில்லை 4. உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகின்றீர் - என் ஆத்துமத்தின் அந்தரத்தில் அறிவையூட்டும் என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன் பனிவெண்மைக் குயர்வாகப் புனிதமாவேன் 5. வல்லவராம் பிதாவை நாம் வாழ்த்திடுவோம் சுதனேசு கிறிஸ்துவுக்கும் தோத்திரமே - நம் உள்ளத்தில் குடி கொள்ளும் ஆவிக்கும் என்றென்றும் புகழ் ஒலிக்க ஆமென்
thayai seivaai naadha en paavangalai neekki 1. anbudane yezhai enmael irakkam vaiyum anudhabiththu en pizhaiyai agatrumaiyaa paavamadhai neekki ennaip pani polaakkum thoshamellaam theerththu ennaith thooimaiyaakkum 2. en kutram naanarivaen vellidai malaibol theevinaiyai maravaadhen manadhu endrum - um punithaththaip pokki naan paaviyaanen - neer theemaiyendru karudhuvadhaith thunindhu seidhaen 3. paavaththil jenmiththaen neeyarivaai thoshaththil petreduththaal en thaayae - um theerppu thanil kutramo kuraiyo illai - um mudivugalin needhiyaiyum edhirppaarillai 4. ullaththil unmaiyai neer virumbuginreer - en aaththumaththin andharaththil arivaiyoottum en paavam theerppaayin thooimaiyaavaen panivenmaik kuyarvaagap punithamaavaen 5. vallavaraam pithavai naam vaazhththiduvom sudhanesu christhuvukkum thoththiramae - nam ullaththil kudi kollum aavikkum enrendrum pugazh olikka amen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.