தேடுகிறேன் உன்னையே தெய்வமே

thaedugiraen unnaiyae deivame

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

தேடுகிறேன் உன்னையே தெய்வமே நாடுகிறேன் உந்தனின் உறவையே (2) என்றும் உன்னை அன்பு செய்யும் உள்ளத்தை -2 இன்றெனக்குத் தாருமே தெய்வமே முழுதுமே 1. உலகமெல்லாம் உன்னைத் தேடினேன் - நான் உன்னை என்னில் காண மறந்தேன் (2) உலகம் தரும் இன்பங்களில் நிலைத்திருந்தேன் - உன் உறவுக்கரம் பற்றிடவே மறந்திருந்தேன் உன்னையே தந்தருள்வாய் தெய்வமே தினமுமே 2. என்னகத்தைக் கூர்ந்து நோக்கினேன் - அதில் உன் முகத்தைக் கண்டு மகிழ்ந்தேன் (2) உன்னையே அரணாக பற்றிக் கொண்டேன் - உன் அன்பையும் அருளையும் கண்டு கொண்டேன் உன்னிலே சரணடைந்தேன் தெய்வமே என்றுமே
thaedugiraen unnaiyae deivame naadugiraen undhanin uravaiyae (2) endrum unnai anbu seiyum ullaththai -2 inrenakkuth thaarumae deivame muzhudhumae 1. ulagamellaam unnaith thaedinen - naan unnai ennil kaana marandhaen (2) ulagam tharum inbangalil nilaiththirundhaen - un uravukkaram patridavae marandhirundhaen unnaiyae thandharulvaai deivame thinamumae 2. ennagaththaik koorndhu nokkinen - adhil un mugaththaik kandu magizhndhaen (2) unnaiyae aranaaga patrik kondaen - un anbaiyum arulaiyum kandu kondaen unnilae saranadaindhaen deivame endrumae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.