நம்பிக்கை தரும் சிலுவையே

nambikkai tharum siluvaiyae

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

நம்பிக்கை தரும் சிலுவையே நீ மரத்துட் சிறந்த மரம் ஆவாய் உன்னைப் போன்று தழை பூ கனியை எந்த காவும் ஈந்திடுமோ இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ 1. மாட்சி மிக்க போரின் வெற்றி விருதை நாவே பாடுவாய் உலக மீட்பர் பலியதாகி வென்ற விதத்தைக் கூறியே சிலுவைச் சின்னமதைப் புகழ்ந்து ஜெயத்தின் கீதம் ஓதுவாய் 2. தீமையான கனியைத் தின்று சாவிலே விழுந்த நம் ஆதித் தந்தைக்குற்ற தீங்கை கண்டு நொந்த சிருஷ்டிகர் மரத்தால் வந்த தீங்கை நீக்க மரத்தை அன்றே குறித்தனர் 3. வஞ்சகன் செய் சூழ்ச்சி பலவும் சூழ்ச்சியால் மேற்கொள்ளவும் பகைவன் செய்த கேட்டினின்று நன்மை விளையச் செய்யவும் வேண்டுமென்று நமது மீட்பின் ஒழுங்கில் குறித்து இருந்தது 4. எனவே புனித கால நிறைவில் தேவபிதா தம் மைந்தனை விண்ணில் நின்று அனுப்பலானார் அன்னை கன்னி வயிற்றிலே ஊன் எடுத்து வெளிவந்தாரே மண்ணகத்தைப் படைத்தவர் 5. இடுக்கமான முன்னட்டியிலே கிடந்து குழந்தை அழுகிறார் தேவ உடலைத் துகிலில் பொதிந்து சுற்றி வைத்து கன்னித்தாய் இறைவன் அவர்தம் கையும் காலும் கச்சையாலே பிணைக்கின்றார் 6. முப்பதாண்டு முடிந்த பின்னர் உடலின் காலம் நிறைவுற மீட்பர் தாமாய் மனமுவந்து பாடுபடவே கையளித்தார் சிலுவை மரத்தில் பலியாகிடவே செம்மறி உயர்த்தப் படலானார் 7. கசந்த காடி அருந்திச் சோர்ந்து முட்கள் ஈட்டி ஆணிகள் மென்மை உடலைத் துளைத்ததாலே செந்நீர் பெருகிப் பாயவே விண்ணும் மண்ணும் கடலும் உலகும் அதனால் தூய்மை ஆயின 8. வளர்ந்த மரமே உன் கிளை தாழ்த்தி விறைத்த உடலைத் தளர்த்துவாய் இயற்கை உனக்கு ஈந்த வைரம் இளகி மென்மை ஆகி நீ உயர்ந்த வானின் அரசர் உடலின் வருத்தம் தணித்துத் தாங்குவாய் 9. மரமே நீயே உலகின் விலையைத் தாங்கத் தகுதியாகினை திருச்செம்மறியின் குருதி உன்மேல் பாய்ந்து தோய்த்த தாதலால் புயலில் தவிக்கும் உலகிற்கெல்லாம் புகலிடம் நீ படகும் நீ 10. பரம திருத்துவ இறைவனுக்கு முடிவில்லாத மங்களம் பிதாவும் சுதனும் தூய ஆவியும் சரிசமப் புகழ் பெறுகவே அவர்தம் அன்பின் அருளினாலே நம்மைக் காத்து மீட்கின்றார் - ஆமென்
nambikkai tharum siluvaiyae nee maraththut sirandha maram aavaai unnaip pondru thazhai poo kaniyai endha kaavum eendhidumo iniya sumaiyai iniya aaniyaal inidhu thaangum maramae nee 1. maatchi mikka porin vetri virudhai naavae paaduvaai ulaga meetpar paliyadhaagi vendra vidhaththaik kooriyae siluvaich sinnamadhaip pugazhndhu jeyaththin keedham odhuvaai 2. theemaiyaana kaniyaith thindru saavilae vizhundha nam aadhith thandhaikkutra theengai kandu nondha sirushtigar maraththaal vandha theengai neekka maraththai anrae kuriththanar 3. vanjagan sei soozhchchi palavum soozhchchiyaal maerkollavum pagaivan seidha kaettinindru nanmai vilaiyach seiyavum vaendumendru namadhu meetpin ozhungil kuriththu irundhadhu 4. enavae punitha kaala niraivil thaevapitha tham maindhanai vinnil nindru anuppalaanaar annai kanni vayitrilae oon eduththu velivandhaarae mannagaththaip padaiththavar 5. idukkamaana munnattiyilae kidandhu kuzhandhai azhugiraar thaeva udalaith thugilil podhindhu sutri vaiththu kanniththaai iraivan avardham kaiyum kaalum kachchaiyaalae pinaikkinraar 6. muppadhaandu mudindha pinnar udalin kaalam niraivura meetpar thaamaai manamuvandhu paadubadavae kaiyaliththaar siluvai maraththil paliyaagidavae semmari uyarththap padalaanaar 7. kasandha kaadi arundhich sorndhu mutkal eetti aanigal menmai udalaith thulaiththadhaalae senneer perugip paayavae vinnum mannum kadalum ulagum adhanaal thooimai aayina 8. valarndha maramae un kilai thaazhththi viraiththa udalaith thalarththuvaai iyarkai unakku eendha vairam ilagi menmai aagi nee uyarndha vaanin arasar udalin varuththam thaniththuth thaanguvaai 9. maramae neeyae ulagin vilaiyaith thaangath thagudhiyaaginai thiruchchemmariyin kurudhi unmael paaindhu thoiththa thaadhalaal puyalil thavikkum ulagirkellaam pugalidam nee padagum nee 10. parama thiruththuva iraivanukku mudivillaadha mangalam pithavum sudhanum thooya aaviyum serisamap pugazh perukavae avardham anbin arulinaalae nammaik kaaththu meetkinraar - amen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.