பழிகளை சுமத்திப் பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார்
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக
1. தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார்
2. விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு
3. தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள்
4. மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
வருத்தினார் தம்மை உம்மோடு
5. நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின்
விலையாய் மாதின் சிறு துணியில்
6. ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால் - அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்
7. விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர்
8. மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்
ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர்
9. உடைகள் களைந்திட உமைத் தந்தீர் - இரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர்
10. பொங்கிய உதிரம் வடிந்திடவே - உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே
11. இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி
இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு
12. துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை
உயிரற்ற உடலினை மடி சுமந்து
13. ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர்
அடங்கிய கல்லறை உமதன்று
14. முன்னர் பன்முறை உரைத்தது போல் - நீர்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தீர்
pazhigalai sumaththip parigasiththaar - uyir
pariththida ennith theerppaliththaar
enakkaaga iraiva enakkaaga
idarbada vandheer enakkaaga
1. thaalaach siluvai sumakka vaiththaar - ummai
maalaath thuyaraal thudikka vaiththaar
2. vizhundheer siluvaip paluvodu - meendum
ezhundheer thuyargalin ninaivodu
3. thaangida vonnaath thuyarutrae - ummaith
thaangiya annai thuyarutraal
4. maruththida mudiyaa nilaiyaalae - seemon
varuththinaar thammai ummodu
5. nilaiyaai padhindhadhu um vadhanam - anbin
vilaiyaai maadhin siru thuniyil
6. oindheer paluvinaich sumandhadhanaal - andho
saaindheer nilaththil marumuraiyum
7. vizhineer perukkiya magalirukku - anbu
mozhineer nalgi vazhi thodarndheer
8. moonraam muraiyaai neer vizhundheer - kaal
oondri nadandhidum nilai thalarndheer
9. udaigal kalaindhida umaith thandheer - iraththa
madaigal thirandhida mei nondheer
10. pongiya udhiram vadindhidavae - ummaith
thongidach seidhaar siluvaiyilae
11. innuyir agandradhu umai vittu - boomi
irulil aazhndhadhu oli kettu
12. thuyarutruth thudiththaal ulam nondhu - annai
uyiratra udalinai madi sumandhu
13. odungiya umadhudal podhiyappattu - neer
adangiya kallarai umadhandru
14. munnar panmurai uraiththadhu pol - neer
moonraam naalil uyirthezhundheer
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.