பாடுகள் நீர் பட்டபோது பாய்ந்து ஓடிய இரத்தம்
கோடிப் பாவம் தீர்த்து மோட்சம்
கொள்ளுவிக்க வல்லதே
கெட்டுப் போனோம் பாவியானோம்
கிருபை செய்யும் நாதனே
மட்டிலாக் கருணை என் மேல்
வைத்திரங்கும் இயேசுவே
1. துஷ்ட யூதர் தூணினோடு
தூய கைகள் கட்டியே
கஷ்டமாய டித்த போது
கான்ற செந்நீர் எத்துணை
2. சென்னிமேற் கொடிய யூதர்
சேர்த்து வைத்த முள்முடி
தன்னால் வடிந்த இரத்தத் தினால்
சர்வ பாவம் நீங்குமே
3. நீண்ட இருப்பாணி கொண்டு
நிஷ்டூரர் கை கால்களை
தோண்டிய போது சொரிந்த
தூய இரத்தம் எத்துணை
4. மெத்த குரோ தத்தினாலே
விலாவையும் ஓர் சேவகன்
குத்தவே சொரிந்த இரத்தம்
கொண்டு எம்மை மீட்பீரே
5. ஐந்து காயத்தால் வடிந்த
அரிய இரத்தத் தினால்
மிஞ்சும் எங்கள் பாவந் தீர்க்க
வேண்டு கின்றோம் இயேசுவே
paadugal neer pattabodhu paaindhu odiya iraththam
kodip paavam theerththu motcham
kolluvikka valladhae
kettup ponom paaviyaanom
kirubai seiyum naadhane
mattilaak karunai en mael
vaiththirangum yesuve
1. thushta yoodhar thooninodu
thooya kaigal kattiyae
kashtamaaya tiththa podhu
kaandra senneer eththunai
2. sennimaer kodiya yoodhar
saerththu vaiththa mulmudi
thannaal vadindha iraththath thinaal
sarva paavam neengumae
3. neenda iruppaani kondu
nishtoorar kai kaalgalai
thondiya podhu sorindha
thooya iraththam eththunai
4. meththa kuro thaththinaalae
vilaavaiyum or saevagan
kuththavae sorindha iraththam
kondu emmai meetpeerae
5. aindhu kaayaththaal vadindha
ariya iraththath thinaal
minjum engal paavan theerkka
vaendu kinrom yesuve
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.