அதிகாலையில் உம் திருமுகம்

adhigaalaiyil um thirumugam

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனை (2) அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே 1. இந்த நாளில் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத் துடிப்பாக மாற்றும் என் ஜீவ நாட்கள் எல்லாம் செப வீரன் என்று எழுதும் 3. சுவிசேஷ பாரம் ஒன்றே என் சுமையாக மாற வேண்டும் என் தேச எல்லையெங்கும் உம் நாமம் சொல்ல வேண்டும் 4. உமக்குகந்த தூயபலியாய் இந்த உடலை ஒப்புக்கொடுத்தேன் ஆட்கொண்டு என்னை நடத்தும் அபிஷேகத்தாலே நிரப்பும்
adhigaalaiyil um thirumugam thaedi arppaniththaen ennaiyae aaraadhanai thuthi thoththirangal appane umakkuth thandhaen aaraadhanai aaraadhanai (2) anbar yesu raajanukkae aaviyaana thaevanukkae 1. indha naalil ovvoru nimidamum undhan ninaivaal niramba vaendum en vaayin vaarththai ellaam pirar kaayam aatra vaendum 2. undhan yekkam viruppam ellaam en idhayath thudippaaga maatrum en jeeva naatkal ellaam seba veeran endru ezhudhum 3. suvisaesha paaram onrae en sumaiyaaga maara vaendum en thaesa ellaiyengum um naamam solla vaendum 4. umakkugandha thooyabaliyaai indha udalai oppukkoduththaen aatkondu ennai nadaththum abishegaththaalae nirappum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.