யாரை நான் அனுப்புவேன்

yaarai naan anuppuvaen

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

யாரை நான் அனுப்புவேன் என் மக்களின் விடுதலைக்காய் இதோ நான் இருக்கின்றேன் என்னை அனுப்பிவிடும் 1. எகிப்தில் நம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகளைக் கண்ணுற்றோம் வேலை வாங்கும் மேற்பார்வையாளரின் கொடுமையின் பொருட்டு அவர்கள் இடுகிற கூக்குரலையும் கேள்வியுற்றோம் அவர்களை எகிப்தியரின் கைகளினின்று விடுவிக்க இறங்கி வந்தோம் நீ வா அதற்காக உன்னை அனுப்பினோம் நாமே உன்னோடிருப்போம் என்னோடு நீயிருக்க எனக்குக் குறையில்லை அறியாத மந்தை தெரியாத இடங்கள் என்றும் தயக்கமில்லை இம்மக்கட்காய் பணியாற்ற என்னையே தருகின்றேன் 2. நீ போய் இந்த மக்களுக்கு கேட்டும் கேட்டும் உணர மாட்டீர்கள் பார்த்தும் பார்த்தும் நீங்கள் அறியீர்கள் என்று சொல்வாயாக இதோ நம் நெருப்புத்தழல் உன் உதடுகளைத் தொட்டது நீ வா அவர்களிடம் உன்னை அனுப்பினோம் உன்னை இறைவாக்கினராய் ஏற்படுத்தினோம் என்னை நீ அழைத்ததால் எனக்குப் பயமில்லை பாவங்கள் உண்டு பலவீனமுண்டு என்றும் தயக்கமில்லை உன் துணையில் பணியாற்ற என்னையே தருகின்றேன்
yaarai naan anuppuvaen en makkalin vidudhalaikkaai idho naan irukkinraen ennai anuppividum 1. egipthil nam makkalukku yerpattulla thollaigalaik kannutrom vaelai vaangum maerpaarvaiyaalarin kodumaiyin poruttu avargal idugira kookkuralaiyum kaelviyutrom avargalai egipthiyarin kaigalinindru viduvikka irangi vandhom nee vaa adharkaaga unnai anuppinom naamae unnodiruppom ennodu neeyirukka enakkuk kuraiyillai ariyaadha mandhai theriyaadha idangal endrum thayakkamillai immakkatkaai paniyaatra ennaiyae tharuginraen 2. nee poi indha makkalukku kaettum kaettum unara maatteergal paarththum paarththum neengal ariyeergal endru solvaayaaga idho nam neruppuththazhal un udhadugalaith thottadhu nee vaa avargalidam unnai anuppinom unnai iraivakkinaraai yerpaduththinom ennai nee azhaiththadhaal enakkup payamillai paavangal undu palaveenamundu endrum thayakkamillai un thunaiyil paniyaatra ennaiyae tharuginraen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.