ஆண்டவரே உம் இல்லம்

aandavare um illam

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ஆண்டவரே உம் இல்லம் வருகிறேன் வருகிறேன் - 2 வருகிறேன் வருகிறேன் உன் இல்லம் தேடி வருகிறேன் வருகிறேன் வருகிறேன் உன் அன்பைப் பாடி வருகிறேன் (2) ஆண்டவரே உன் இல்லம் வருகின்றேன் அடைக்கலம் நாடி உன் பீடம் வருகிறேன் தொழுகிறேன் - 2 (2) உன் வழி நடந்திட செபிக்க வருகிறேன் வியத்தகு செயல்களை எண்ணி வியக்கிறேன் உன் அருளினில் நனைந்திட வருகிறேன் உள்ளதை உவப்புடன் தருகிறேன் உன் ஒளியினில் வாழ்ந்திட விழைகிறேன் தாயின் கருவில் எனைத் தேர்ந்து கொண்டாய் கரங்கள் பிடித்து எனை அழைத்து வந்தாய் இறைவா என் இறைவா என் ஆதாரம் நீயாகவா இமைகள் போல எனைக் காத்து நின்றாய் உன் கரத்தில் என் பெயரைப் பொறித்து வைத்தாய் இருளைப் பழிக்காமல் ஒளி ஏற்ற - என் இதயம் கலங்காமல் உறவாட உன் ஒளியினில் கலந்திடுவேன் 2. நானோ சிறுவனென்று விலகி நின்றேன் ஏதும் அறியேனென்று தயங்கி நின்றேன் இறைவா என் இறைவா என் நல்லாயன் நீயாக வா உமது வார்த்தைகளைப் பேசப் பணித்தாய் உமது பணிக்கு எனைத் தேர்ந்து கொண்டாய் கடமை மறவாது பணி செய்ய என் கனவு நனவாக தினம் உழைக்க உன் உறவினில் கலந்திடுவேன்
aandavare um illam varugiraen varugiraen - 2 varugiraen varugiraen un illam thaedi varugiraen varugiraen varugiraen un anbaip paadi varugiraen (2) aandavare un illam varuginraen adaikkalam naadi un peedam varugiraen thozhugiraen - 2 (2) un vazhi nadandhida sebikka varugiraen viyaththagu seyalgalai enni viyakkiraen un arulinil nanaindhida varugiraen ulladhai uvappudan tharugiraen un oliyinil vaazhndhida vizhaigiraen thaayin karuvil enaith thaerndhu kondaai karangal pidiththu enai azhaiththu vandhaai iraiva en iraiva en aadhaaram neeyaagavaa imaigal pola enaik kaaththu ninraai un karaththil en peyaraip poriththu vaiththaai irulaip pazhikkaamal oli yetra - en idhayam kalangaamal uravaada un oliyinil kalandhiduvaen 2. naano siruvanendru vilagi ninraen yedhum ariyaenendru thayangi ninraen iraiva en iraiva en nallaayan neeyaaga vaa umadhu vaarththaigalaip paesap paniththaai umadhu panikku enaith thaerndhu kondaai kadamai maravaadhu pani seiya en kanavu nanavaaga thinam uzhaikka un uravinil kalandhiduvaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.