ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
அடிமை நான் அய்யா
ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
அகன்று போகமாட்டேன் - உம்மை விட்டு
அகன்று போக மாட்டேன்
1. ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு
அதன்படி நடக்கின்றேன்
உலகினை மறந்து உம்மையே நோக்கி
ஓடி வருகின்றேன்
2. வாலிபன் தனது வழிதனையே
எதனால் சுத்தம் பண்ணுவான்
தேவனே உமது வார்த்தையின்படியே
காத்து கொள்வதனால்
3. வேதத்தில் உள்ள அதிசயம் அனைத்தும்
நன்கு புரியும்படி
தேவனே எனது கண்களையே
தினமும் திறந்தருளும்
aandavare um paadham saranadaindhaen
adimai naan aiyaa
aayiram aayiram thunbangal vandhaalum
agandru pogamaattaen - ummai vittu
agandru poga maattaen
1. ovvoru naalum um kural kaettu
adhanbadi nadakkinraen
ulaginai marandhu ummaiyae nokki
odi varuginraen
2. vaaliban thanadhu vazhidhanaiyae
edhanaal suththam pannuvaan
devane umadhu vaarththaiyinbadiyae
kaaththu kolvadhanaal
3. vaedhaththil ulla adhisayam anaiththum
nangu puriyumbadi
devane enadhu kangalaiyae
thinamum thirandharulum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.