இராஜாதி இராஜனே தேவாதி தேவனே
விண்ணோர் வணங்கிடும் விமல இராஜனே
1. வானின்று இறங்கிய உணவு நானென்றீர்
ஆவலாய் உண்பவர் ஆன்ம வாழ்வைக் கண்டிடுவீர்
தேவாதி தேவனே இராஜாதி இராஜனே
போற்றி துதித்துப் பாடிடுவோம்
2. அன்பினால் உம்மையே உணவாகத் தந்தீர்
அன்புடன் உலகினில் வாழ்வும் வழியும் காட்டினீர்
3. என்னில் நீர் நிலைத்தாலே வாழ்வு உண்டென்றீர்
உம்மில் நான் நிலைக்கவே விரைந்து எம்மில் வந்திடுவீர்
iraajaadhi iraajane thaevaadhi devane
vinnor vanangidum vimala iraajane
1. vaanindru irangiya unavu naanenreer
aavalaai unbavar aanma vaazhvaik kandiduveer
thaevaadhi devane iraajaadhi iraajane
potri thuthiththup paadiduvom
2. anbinaal ummaiyae unavaagath thandheer
anbudan ulaginil vaazhvum vazhiyum kaattineer
3. ennil neer nilaiththaalae vaazhvu undenreer
ummil naan nilaikkavae viraindhu emmil vandhiduveer
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.