இறைவனோடு உறவு கொள்ளும்

iraivanodu uravu kollum

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இறைவனோடு உறவு கொள்ளும் நேரமே இணைந்து நாமும் பலிசெலுத்த வாருமே (2) பாவிகளைத் தேடி வந்த ஆண்டவர் - 2 பாதம் கழுவிப் பணிகள் செய்ய அழைக்கும் பலியிது 1. உலக மாந்தர் புரியும் பாவச் சுமையெல்லாம் ஒருங்கே தோளில் சுமந்து சென்ற மீட்பரே (2) விலையில்லாத தமது செந்நீர் சிந்தியே விருப்பமோடு நிறைவு செய்த பலியிது வாருங்கள் வாருங்கள் புகழ்ந்து பாடுங்கள் மீட்பராம் கிறிஸ்துவின் அருளை நாடுங்கள் (2) வாழ்வையே புனிதமாய் மாற்றி மகிழுங்கள் - 2 2. முடிவில்லாமல் அன்பு செய்த தேவனை முழுமையாக நமக்குத் தந்த பலியிது (2) பழுதில்லாது பங்குகொள்ள முயலுவோம் பாவம் நீங்கித் தூய்மையடைய வேண்டுவோம் - வாருங்கள் ...
iraivanodu uravu kollum naeramae inaindhu naamum paliseluththa vaarumae (2) paavigalaith thaedi vandha aandavar - 2 paadham kazhuvip panigal seiya azhaikkum paliyidhu 1. ulaga maandhar puriyum paavach sumaiyellaam orungae tholil sumandhu sendra meetparae (2) vilaiyillaadha thamadhu senneer sindhiyae viruppamodu niraivu seidha paliyidhu vaarungal vaarungal pugazhndhu paadungal meetparaam christhuvin arulai naadungal (2) vaazhvaiyae punithamaai maatri magizhungal - 2 2. mudivillaamal anbu seidha devanai muzhumaiyaaga namakkuth thandha paliyidhu (2) pazhudhillaadhu pangugolla muyaluvom paavam neengith thooimaiyadaiya vaenduvom - vaarungal ...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.