உனக்கே புகழ்கீதம் இசைப்பேன் எந்த நாளும்
உனிலே எந்தன் நெஞ்சம் உறவில் இணைந்து மகிழும்
என் உயிரின் உயிரான சொந்தமே
உன் அன்பால் எனைத் தேற்ற வா
நிறைவாழ்வின் வழியான தெய்வமே
நான் வாழ வழிகாட்ட வா
1. சொந்தங்கள் என்னைப் பிரிந்தாலும் சோர்வில்லை
சுகமாய் நானிருப்பேன் உன்னாலேதான்
நீங்காத துன்பம் வந்தாலும் தளர்வில்லை
நிலையாய் நானிருப்பேன் உன்னாலேதான்
கண்மூடும் வேளை கலக்கமில்லை உன்னாலேதான்
எல்லாமே இன்பம் துன்பமில்லை உன்னாலேதான்
2. என் அன்னை என்னைத் தாங்கும் முன் பெயர்சொல்லி
என்னை நீ அழைத்தாய் உனக்காகத்தான்
உன் கையில் என்னைப் பொறித்து வைத்தாய்
உன் சிறகின் நிழலில் அரவணைத்தாய் உனக்காகத்தான்
என் வாழ்வின் பெருமை எனக்கில்லை உனக்காகத்தான்
என் ஆயுட்காலம் எனக்கில்லை உனக்காகத்தான்
unakkae pugazhgeedham isaippaen endha naalum
unilae endhan nenjam uravil inaindhu magizhum
en uyirin uyiraana sondhamae
un anbaal enaith thaetra vaa
niraivaazhvin vazhiyaana deivame
naan vaazha vazhigaatta vaa
1. sondhangal ennaip pirindhaalum sorvillai
sugamaai naaniruppaen unnaalaedhaan
neengaadha thunbam vandhaalum thalarvillai
nilaiyaai naaniruppaen unnaalaedhaan
kanmoodum vaelai kalakkamillai unnaalaedhaan
ellaamae inbam thunbamillai unnaalaedhaan
2. en annai ennaith thaangum mun peyarsolli
ennai nee azhaiththaai unakkaagaththaan
un kaiyil ennaip poriththu vaiththaai
un siragin nizhalil aravanaiththaai unakkaagaththaan
en vaazhvin perumai enakkillai unakkaagaththaan
en aayutkaalam enakkillai unakkaagaththaan
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.