என் ஆற்றலின் ஆண்டவரை

en aatralin aandavarai

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

என் ஆற்றலின் ஆண்டவரை போற்றிப் புகழ்ந்திடுவேன் திருவடி அமர்ந்திடுவேன் கவலைகள் மறந்திடுவேன் என் ஆற்றலின் ஆண்டவரே 1. அரணும் கோட்டையும் அவர் தாமே வலிமையும் துணையும் அவர் கரமே வாழ்வும் வளமையும் வழங்கிடுவார் இடறும் வேளையில் காத்திடுவார் மாந்தர் அழியவே விடுவதில்லை மானிடர் துயரினில் மகிழ்வதில்லை தோளில் தினமும் எனைச் சுமந்திடுவார் தாயைப் போல தினம் காத்திடுவார் 2. உமது பேரன்பை புகழ்ந்திடுவேன் உமது நினைவினில் மகிழ்ந்திடுவேன் அடைக்கலம் உம்மில் கண்டிடுவேன் சிறகுகள் நிழலில் அகமகிழ்வேன் கால்கள் சோர்ந்திட விடுவதில்லை காத்திடும் கண்கள் அயர்வதில்லை தேடி வந்து எனை மீட்டிடுவார் தேவைகள் யாவையும் தீர்த்து வைப்பார்
en aatralin aandavarai potrip pugazhndhiduvaen thiruvadi amarndhiduvaen kavalaigal marandhiduvaen en aatralin aandavare 1. aranum kottaiyum avar thaamae valimaiyum thunaiyum avar karamae vaazhvum valamaiyum vazhangiduvaar idarum vaelaiyil kaaththiduvaar maandhar azhiyavae viduvadhillai maanidar thuyarinil magizhvadhillai tholil thinamum enaich sumandhiduvaar thaayaip pola thinam kaaththiduvaar 2. umadhu paeranbai pugazhndhiduvaen umadhu ninaivinil magizhndhiduvaen adaikkalam ummil kandiduvaen siragugal nizhalil agamagizhvaen kaalgal sorndhida viduvadhillai kaaththidum kangal ayarvadhillai thaedi vandhu enai meettiduvaar thaevaigal yaavaiyum theerththu vaippaar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.