என்னைச் சுமப்பதனால் இறைவா

ennaich sumappadhanaal iraiva

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

என்னைச் சுமப்பதனால் இறைவா உன் சிறகுகள் முறிவதில்லை அள்ளி அணைப்பதனால் இறைவா உன் அன்பு குறைவதில்லை ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும் வானம் கிழிவதில்லை -2 ஆயிரம் மைல்கள் நடந்திட்டபோதும் நதிகள் அழுவதில்லை -2 1. கருவைச் சுமக்கும் தாய்க்கு என்றும் குழந்தை சுமையில்லை கருவிழிச் சுமக்கும் இருவிழி அதற்கு இமைகள் சுமையில்லை (2) மதுவைச் சுமக்கும் மலர்களுக்கென்றும் பனித்துளி சுமையில்லை-2 வானைச் சுமக்கும் மேகத்திற்கென்றும் மழைத்துளி சுமையில்லை-2 2. அகழும் மனிதரைத் தாங்கும் பூமிக்கு முட்கள் சுமையில்லை இகழும் மனிதரில் இறக்கும் மனதுக்குச் சிலுவைகள் சுமையில்லை (2) உலகின் பாவம் சுமக்கும் தோள்களில் நானொரு சுமையில்லை (2) உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் இதயம் சுமையில்லை - 2
ennaich sumappadhanaal iraiva un siragugal murivadhillai alli anaippadhanaal iraiva un anbu kuraivadhillai aayiram minnal idiththitta podhum vaanam kizhivadhillai -2 aayiram mailgal nadandhittabodhum nadhigal azhuvadhillai -2 1. karuvaich sumakkum thaaikku endrum kuzhandhai sumaiyillai karuvizhich sumakkum iruvizhi adharku imaigal sumaiyillai (2) madhuvaich sumakkum malargalukkendrum paniththuli sumaiyillai-2 vaanaich sumakkum maegaththirkendrum mazhaiththuli sumaiyillai-2 2. agazhum manidharaith thaangum boomikku mutkal sumaiyillai igazhum manidharil irakkum manadhukkuch siluvaigal sumaiyillai (2) ulagin paavam sumakkum tholgalil naanoru sumaiyillai (2) uyirai eeyum un siragin nizhalil idhayam sumaiyillai - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.