அப்பா நான் தவறு செய்தேன்
உன் அன்பை உதறிச் சென்றேன்
நான் கெட்டலைந்து ஓடி வந்தேன்
என்னைக் கண்பாரும் உந்தன் பிள்ளை நான் (2)
1. சுமைகளில் சோர்ந்தோரே
என்னிடத்தில் வாரும் என்றீர்
அந்த ஆறுதல் வார்த்தை என்னை
இன்று உம்மிடத்தில் ஈர்த்ததைய்யா
2. வாழ்வு தரும் வார்த்தை எல்லாம்
நீர் என்று அறிந்த பின்னும்
வேறு எங்கு நான் போவேன்
எந்தன் புகலிடம் நீரே அப்பா
3. பாடி வரும் பறவைகளும்
காடுகளில் மிருகங்களும்
உம் அன்பில் மகிழ்ந்திருக்க
நான் உம்மைப் பிரிந்து நொந்தேன்
appaa naan thavaru seidhaen
un anbai udharich senraen
naan kettalaindhu odi vandhaen
ennaik kanbaarum undhan pillai naan (2)
1. sumaigalil sorndhorae
ennidaththil vaarum enreer
andha aarudhal vaarththai ennai
indru ummidaththil eerththadhaiiyaa
2. vaazhvu tharum vaarththai ellaam
neer endru arindha pinnum
vaeru engu naan povaen
endhan pugalidam neerae appaa
3. paadi varum paravaigalum
kaadugalil mirugangalum
um anbil magizhndhirukka
naan ummaip pirindhu nondhaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.